Wednesday, May 30, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
அன்புக்குரியவர்களே,
   மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
அன்பர்களே, 
     இன்றைய முதல் வாசகம், வரலாற்றில் செயல்படுகின்ற இஸ்ரயேலின் ஆண்டவரே உண்மையான கடவுள் என்பதை எடுத்துரைக்கிறது. தமது உரிமைச்சொத்தாக இஸ்ரயேல் இனத்தை தேர்ந்தெடுத்து வழிநடத்திய கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து வாழு மாறு மோசே அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை:
அன்பர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம், நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழும்போதுதான், உரிமைப்பேறு பெற்றவர்களாய் இருக்க முடியும் என்று எடுத்துரைக்கிறது. பிள்ளைகளுக் குரிய மனப்பான்மையினாலே நாம் கடவுளை 'அப்பா, தந்தையே!' என அழைக்கிறோம் என்று புனித பவுல் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு விருப்பமான பிள்ளைகளாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்துக்கு கவனமாக செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. அப்பா, தந்தையே இறைவா,
   உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. விண்ண தந்தையே இறைவா,
   இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதி யிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. வானக அரசரே இறைவா,
   உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த எண்ணங்களிலும், தங் கள் சொந்த விருப்பங்களிலும் நாட்களை செலவிடும்
எம் நாட்டு மக்கள் அனைவரும், மறுவுலக வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேடிதுணைபுரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒற்றுமை அருள்பவரே இறைவா,
   உலகெங்கும் மதம், இனம், குலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் மக்கள் அனைவரும், ஒரே கடவுளாகிய உமது பிள்ளை கள் என்ற உணர்வோடு ஒற்றுமையில் வளரத் தூண்டுதல் அளிக்க
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மூவொரு இறைவா,
   எங்கள் பங்கு சமூகத்தில் ஒன்றித்து வாழும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அன்பிலும் ஒற்றுமையிலும் வளரவும், உமக்கு
விருப்பமான பிள்ளைகளாக வாழவும் தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.