Thursday, February 28, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
  தூயவராம்
ஆண்டவர் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற் கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் முன்னிலையில் தூயவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கி றது. வரலாற்றை வழிநடத்தும் கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது அழைத்தலின் மேன்மையை உணர அழைக்கப்படுகிறோம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், தங்களை மாசற்ற  பலிப்பொருளாக அர்ப்பணிக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து மனம் மாறும் பொழுது ஆண்டவரின் மீட்பை பெற்றுக்கொள்வோம். "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்" என்ற இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிகொடுத்து, தூய வாழ்வு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம், ஓரேபு மலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மோசேயை ஆண்டவர் அழைத்ததை பற்றி எடுத்துரைக்கிறது. எகிப்திய அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்த இஸ்ரயேல் மக்களை விடுவித்து, பாலும் தேனும் பொழியும் பரந்ததோர் நாட் டிற்கு அவர்களை நடத்திச் செல்ல ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார். எரியும் முட்புதரில் மோசேக்கு காட்சி அளித்த கடவுள், அவரிடம் தூய்மையை எதிர்பார்க்கிறார். "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமானது" என்று ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்துவதைக் காண்கி றோம். என்றென்றும் 'இருக்கின்றவராக இருக்கின்ற' கடவுள் முன்னிலையில் தூயவர்க ளாக வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், எகிப்திய அடிமைத்தனத்திலி ருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேலரைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாலைநிலத்தில் அவர் களுக்கு உணவும் தண்ணீரும் கிடைத்த பொழுதும், பெரும்பான்மையோர் ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தனர். கடவுளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் அழிவுக்கு ஆளானார்கள். நாம் மனம் மாறும் பொருட்டு, இவை நமக்கு எச்சரிக்கையாக அமைந் திருக்கின்றன என்பதை திருத்தூதர் சுட்டிக்காட்டுகிறார். பாவத்தின் தீய விளைவினை உணர்ந்தவர்களாய், மனம் மாறிய புதுவாழ்வு வாழும் வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. தூய்மையின் நிறைவாம் இறைவா,
    உமது அருளும் வல்லமையும் பெற்ற ஒருவரை எம் திருச்சபையை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்து, அவர் வழியாக திருச்சபையும் உலகமும் உம்மை நோக்கி முன்னேற துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் வாழும் இறைவா,
   உமது திருச்சபையின் உறுப்பினர்களான ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொது நிலையினர் அனைவரும் தங்கள் அழைத்தலின் மேன்மையை உணர்ந்தவர்களாய், தூய கிறிஸ்தவ வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. இருக்கின்றவராக இருக்கின்ற இறைவா,
   உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், உமக்கும், உமது மக்களுக்கும் பணி செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, நீதி மற்றும் உண்மையின் பாதையில் மக்களை வழிநடத்த உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மனமாற்றம் அருளும் இறைவா,
   இவ்வுலகின் கவலைகளாலும், பண ஆசையாலும் உம்மை மறந்து, தீமையின் பாதை யில் பயணித்து கொண்டிருக்கும் மதிகெட்ட மனிதர்களை மனந்திருப்பி, தூய வாழ்வு வாழ தூண்டுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. புனிதத்துக்கு அழைக்கும் இறைவா,
   உம் திருமகனின் எச்சரிக்கையை முழுமையாக உணர்ந்தவர்களாய், மாசற்ற புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனைவருக்கும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.