Thursday, March 14, 2013

மார்ச் 17, 2013

தவக்காலம் 5-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
    மன்னிப்பளிக்கும் கடவுளின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு, பழைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புதிய அருள் வாழ்வுக்கு கடந்து செல்ல நம்மை அழைக்கிறது.  நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும், மனம் வருந்தி ஆண்டவரிடம் திரும்பும்போது, நம்மை மன்னிக்க அவர் தயாராக இருக்கிறார். பிறரது குற்றங்களை அலசி ஆராயும் நாம், நமது பாவங்களை எண்ணிப் பார்க்க வேண்டு மென ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். எல்லோரும் நம்மை விட்டுச் சென்ற பிறகு, நாம் கடவுள் முன் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், நமது பாவ வாழ்வை களைந்து விட்டு அவரிலே புதுவாழ்வு பெறும் வரம் வேண்டி, இத்திருப் பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுளின் புதுப்பிக்கும் ஆற்ற லைப் பற்றி எடுத்துரைக்கிறார். கடலின் நடுவே பாதை அமைத்து இஸ்ரயேலரை கடந்து போகச் செய்த கடவுள், எகிப்தியரின் படைகளை அதே கடலுக்குள் மூழ்கடித்து அழித்த நிகழ்வு நினைவுபடுத்தப்படுகிறது. தம் மக்களுக்காக பழையவற்றை அழிக்கவும், புதிய வற்றை உருவாக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார் என்பது விளக்கப்படுகிறது. பாழ் வெளியில் நீரோடைகளையும், பாலைநிலத்தில் நீரூற்றுகளையும் தோன்றச் செய்வதாக ஆண்டவர் வாக்குறுதி தருகிறார். நாம் கடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் வாழ்ந்து, கடவுளின் வாக்குறுதிக்கு தகுதிபெற வரம் வேண்டி, இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மாற்றத்துக்கு உரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளுக்காக வாழ்வது பற்றிப் பேசுகிறார். ஒப்பற்ற செல்வமான இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைப்பெற, அனைத் தையும் இழப்பாகக் கருதுவதாக கூறுகிறார். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல் லாவற்றையும் குப்பையாகக் கருதுவதாகவும் திருத்தூதர் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை யும், அவரது உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய, அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருப்பது தேவை என்றும் அவர் எடுத்துரைக்கிறார். புனித பவுலைப் போன்று, கிறிஸ்து என்ற இலக்கை நோக்கி ஓடும் வரம் வேண்டி, இவ்வாசகத் திற்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. சீரமைத்து புதுப்பிப்பவராம் இறைவா,
   எங்கள் புதிய திருத்தந்தையை நிறைவாக ஆசீர்வதித்து, அவர் வழியாக திருச்சபையின் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவருடைய விசுவாச வாழ் வையும் சீரமைத்து புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. மாற்றத்தை தருபவராம் இறைவா,
   உம் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் உலக மக்களிடையே மனமாற்றத்தை உரு வாக்கி, அவர்கள் உள்ளங்களில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஒளியை ஏற்ற வேண் டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. கட்டி எழுப்புபவராம் இறைவா,
   உம்மைப் பற்றிய உண்மையைப் புறக்கணித்து பாவத்தில் வாழும் மக்கள் அனைவரும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணர்ந்து மனம் மாறவும், அதன் வழியாக எங்கள் நாட்டில் உமது அரசை கட்டி எழுப்பவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மன்னிப்பு அருள்பவராம் இறைவா,
   சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமை தவறியதாலும் செய்த பாவங் களால் உமது அன்புறவை இழந்து தவிக்கும் மக்களுக்கு, உமது இரக்கத்தால் மன்னிப்பு வழங்கி புதுவாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மனம்மாற அழைப்பவராம் இறைவா,
   எங்கள் பங்கு குடும்பத்தின் உறுப்பினர்களாகிய பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தங்கள் குற்றங்களை உணர்ந்து மனந்திருந்தவும், பிறரின் குற்றங் களை மன்னித்து வாழவும் தேவையான புதிய உள்ளத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.