Thursday, December 5, 2013

டிசம்பர் 8, 2013

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்" என்ற திரு முழுக்கு யோவானின் அழைப்பை இன்றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. வரப்போகும் கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க நாம் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டுமென யோவான் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது மனமாற்றத்தை அதற் கேற்ற செயல்களால் வெளிப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். "மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப் படும்" என்ற எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிக்கப் படும் பதராக இல்லாமல், ஆண்டவரின் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகத்தில் எசாயா, ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தோன்றும் கிறிஸ்துவை பற்றி முன்னறிவிக்கிறார். அவர் ஏழை, எளியோருக்கு நடுநிலையோடு நீதி வழங்குவார் என்றும், கொடியோரை அழித்தொழிப்பார் எனவும் முன்னறிவிக்கப்படுகிறது. ஆண்டவரின் நாளில் சிங்கங்களையும், காளைகளையும் பச்சிளம் குழந்தை ஒன்றாய் நடத்திச் செல்லும் என வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அப்போது ஆண்டவரின் திருமலை முழுவதும் நன்மை செய்வோரால் நிறைந்திருக்கும் என்ற உறுதி வழங்கப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி நிறைவாக உள்ள இடத்தில் இளைப்பாற வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவருக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூர் பவுல், மறைநூல் தரும் மன உறுதியி னாலும் ஊக்கத்தினாலும் நாம் நம்பிக்கையோடு வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நாம் ஒரே மனத்தினராய் இருக்குமாறு திருத்தூதர் அறி வுறுத்துகிறார். கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டது போல நாமும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவில் வெளிப்பட்ட கடவுளின் இரக் கத்தைப் பார்த்து, அவருக்கு உண்மையுள்ளவர்களாக வாழ வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி மிகுந்தவராம் இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக உமக்காக வழியை ஆயத்தம் செய்பவர்களாக வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறை வாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதி நிறைந்தவராம் இறைவா,
   
மக்களிடையே இரக்கமும், நீதியும், அன்புடன் கூடிய நற்செயல்களும் பெருக உழைக் கும் நல்ல மனதினை உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புனிதம் மிகுந்தவராம் இறைவா,
 
புனிதத்துக்கு எதிராக எம் நாட்டில் நிலவும் ஒழுக்க கேடுகளும், தவறான வழிபாடு களும் மறையும் வகையில் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் நிறைந்தவராம் இறைவா,
   அன்பு, நீதி, இரக்கம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளால் பல்வேறு துன்பங் களுக்கு ஆளாகியிருக்கும் மக்கள் மீது பரிவு கொண்டு, அவர்களது வேதனை நீங்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நன்மை மிகுந்தவராம் இறைவா,
   எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும் நீதியின் செயல் களால் நிரப்பப்பெற்று, குற்றமற்றவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.